பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

வன்னிக்கான பாதுகாப்புப் படைகளின் பிரதி கட்டளைத் தளபதியாக பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம். ரிஸ்வி ரிஸிக் (Major General M. Rizvi Rizick RSP ndu) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (29.09.2026) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இச்சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, Brigadier L. P. Athukorala RSP USP psc மற்றும் Lieutenant E. D. C. De Zoysa ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

ஊடகப் பிரிவு

மாவட்டச் செயலகம்,

யாழ்ப்பாணம்.

Recommended For You

About the Author: admin