வெளிநாட்டு இலங்கையர்கள் பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும் இது இந்த வருடத்தின்... Read more »

மத்திய கிழக்கு போர்: இலங்கையில் தங்கம் விலை அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக செட்டியார் வீதியில் 24 கரட் தங்கத்தின்... Read more »
Ad Widget

தங்கத்தின் விலையில் உயர்வு!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில... Read more »

வாகன இறக்குமதி தொடர்பான முக்கியத் தகவல்!

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100... Read more »

ரூபாவின் பெறுமதி உயர்வு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.06 ரூபாவாகவும்,... Read more »

கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கறுவா ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் 11,347 மெட்ரிக்... Read more »

சில இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படும்

ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் சில இறக்குமதிப் பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சராகவும் கடமையாற்றுகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதலின்படி முக்கிய இறக்குமதிகள் மீதான வரி கட்டமைப்பை மாற்றியமைப்பதை... Read more »

வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை

பாரியளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட எட்டு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடருவதற்கு முன்னர் இறுதிச் சந்தர்ப்பமாக ஞாபக மூட்டல்களை வழங்கியதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார். இவ்வாறு வரி ஏய்ப்பில் ஈடுபடும் குறித்த நிறுவனங்களை கடந்த தினங்களில் உள்நாட்டு... Read more »

வாகன இறக்குமதி பற்றிய அப்டேட்!

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ​​வாகனங்களை இறக்குமதி... Read more »

முட்டையின் விலை உயர்வுக்குக் காரணம் என்ன தெரியுமா?

அண்மைக்காலமாக 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாகவும், குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை... Read more »