வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – தலைமறைவான நபரின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு!
யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நபரொருவர் வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


