சவூதி அரேபியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சீன ரோபோக்கள்!!

சவூதி அரேபியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் சீன ரோபோக்கள்!!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள சீனத் தூதரகத்தில்,

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 77வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்வின் போது, சீனாவால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோபோக்கள் பிரபல நடன அசைவுகளைத் துல்லியமாக ஆடி அதிதிகளையும் பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தின.

 

சவூதி அரேபியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியில் சீனாவின் அபார முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்

 

வகையில் அமைந்த இந்த ரோபோக்களின் நடனம், விழாவில் கலந்துகொண்ட அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

Recommended For You

About the Author: admin