இந்தியாவின் சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை இன்று (16-06-2023) வந்தடைந்தது.
கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலை வரவேற்றனர்.
அவர்களுடன் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A . சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் சார்பில் மத்தியகுழு உறுப்பினர் வடலியூர் இரா.சரவணன் மற்றும் யாழ். அரச அதிபர், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுக நவீன பயணிகள் முனையம் இன்றைய தினம் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.