தபால் பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார். Read more »
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட... Read more »
பாராளுமன்றத் தேர்தலில் யாழ்., கிளிநொச்சி மாவட்டத்தில் 5, 93, 187 பேர் வாக்களிக்கத் தகுதி – தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் தெரிவிப்பு. நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர்... Read more »
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்துக்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாளைய... Read more »
நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ். மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4... Read more »
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம், சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்துக்கும்,... Read more »
இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14 – 11 – 2024) நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும். நாடளாவிய ரீதியில் 13,421... Read more »
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் அனைத்து எழுதுப் பொருட்களும் இன்றைய நாள் முழுவதும் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்... Read more »
இலங்கை என்பியில் சங்கத்தின் தலைவராக என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் கோபிசங்கர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம்... Read more »
கிளிநொச்சி – ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடை இன்று காலை அகற்றப்பட்டது. ஏ – 9 வீதியில் கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையே அகற்றப்பட்டது. குறித்த பகுதியில் 17 வருடங்களாக காணப்பட்ட வீதித்தடை இன்று காலை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »