அராலி இந்துக்கல்லூரி விவசாயக் கழக மாணவரின் முன்மாதிரி செயற்பாடு

யாழ்ப்பாணம் –
அராலிப் பகுதியின் காலநிலைக்கும், மண் மற்றும் நீர் கிடைக்கும் வாய்ப்புக்களிற்கும் ஏற்ப குறைந்த செலவில், நிறைந்த போசணைமிக்க பயிராக முருங்கை அராலி இந்துக்கல்லூரி விவசாய கழகத்தினரால் இனங்கண்டு, அராலி கிராமத்தில் முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில், அராலி இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களினதும் குடும்பங்களுக்கு முருங்கை நாற்றுக்கள்
வழங்கப்பட்டன.

அராலி இந்துக் கல்லூரி விவசாய கழக மாணவர்களால் நல்லின முருங்கை நாற்றுகள் பாடசாலையில் உற்பத்தி செய்யப்பட்டு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் முதல்நாள் நிகழ்வில் மாணவர்களிற்கு வைபவ ரீதியாக வழங்கப்பட்டது.

இதன்பின்னர் சகல மாணவர் அடங்கிய குடும்பத்திற்கும் பாடசாலைத் தோட்டத்தின் நாற்றுமேடையில் உருவாக்கிய பொதிசெய்யப்பட்ட நாற்றுக்கள் வழங்கப்பட்டன.

அராலி இந்துக்கல்லூரி விவசாயக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாடு பலரின் பாராட்டையும் பெற்றது.

உலக உணவு ஸ்தாபனத்தின் நிதி ஈட்டத்துடன் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தொழில்முனைவுடன் கூடிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் பாடசாலையாகவும் இது காணப்படுகிறது.

Recommended For You

About the Author: S.R.KARAN