மாணவனை தாக்கி முச்சக்கர வண்டியில் அனுப்பி வைத்த அதிபர் மாணவனின் தாய் குற்றச்சாட்டு.
யாழ் வலிகாம வலயத்தில் இயங்கும் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் தாக்கி விட்டு முச்சக்கர வண்டியில் வீதியில் இறக்கி விட்டதாக மாணவனின் தாய் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தனது மகன் பாடசாலைக்கு நேரம் தாழ்த்தி சென்ற காரணத்தினால் ஆசிரியர் குப்பையாளுமாறு தண்டனை வழங்கினார்.
தனது மகன் குப்பையை குணிந்து அள்ளும்போது அணிந்திருந்த சேட் வெளியே வந்தபோது ஆசிரியர் சேட்டை உள்ளே விட தெரியாதா என கேட்டு முதுகில் குத்தினார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு ஆசிரியர் நீ சண்டியனா கேட்டு அவரும் முதுகில் கையால் குத்தி விட்டு அதிபரிடம் அழைத்துச் சென்றார்கள்.
அதிபர் நீய் பாடசாலையில் படிப்பதற்கு தகுதி இல்லை என அவரும் முதுகில் கையால் அடித்து விட்டு இரண்டு ஆசிரியர்களுடன் பாடசாலை நேரத்தில் மாணவனை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி எனது கடைக்கு அருகாமையில் இறக்கிவிட்டு சென்றனர்.
மகன் நடந்தவற்றை என்னிடம் கூறினார் முதுகு நோவதாக தெரிவித்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தேன் .
வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த மகன் பாடசாலை செல்லவில்லை வீட்டில் தற்கொலைக்கும் முயற்சிப்பதாக தன்னுடைய இன்னொரு மகன் தொலைபேசி மூலம் எனக்குத் தெரியப்படுத்தினார்.
நான் கடையில் நின்று வீடு சென்றேன் மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது பாடசாலையில் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் நான் சாகப் போறேன் என மகன் என்னிடம் கூறினார் என்றார்.
குறித்த விடையம் தொடர்பில் அப் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது மாணவனுக்கு தாங்கள் அடிக்கவில்லை எனவும் பாடசாலை முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறினார்.
ஏன் பாடசாலை நேரத்தில் மாணவனை வீட்டுக்கு அனுப்பினீர்கள் என கேட்டபோது பெற்றோரை அழைத்து வருமாறு பல தடவை மாணவனுக்கு கூறியும் அழைத்து வராத காரணத்தினால் அழைத்து வருவதற்காக அனுப்பினோம் என்றார்

