ஐரோப்பிய அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்க ஈரான் எச்சரிக்கை!

ஐரோப்பிய அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்க ஈரான் எச்சரிக்கை!

ஐரோப்பாவில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் தற்போது அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாயி (Rezaei), ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அந்த இராணுவத் தளங்களும் ஈரானின் தாக்குதல் இலக்குகளாக மாறும் என்று எச்சரித்துள்ளார்.

 

மேலும், ஈரானின் ஏவுகணைகள் சென்றடைய முடியாத தொலைவில் இருப்பதாக வாஷிங்டன் கருதும் தொலைதூர இராணுவத் தளங்கள் மற்றும் தீவுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் செறிவூட்டியுள்ள யுரேனியத்தில் ஒரு துகளைக்கூட ஒப்படைக்கப்போவதில்லை என்று தெஹ்ரான் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin