யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும்.

இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை சத்தியம் செய்ததற்கு முற்றிலும் மாறாக மீளவும் போட்டியிடுகின்றார்.

பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா

1. முள்ளிவாய்க்காலில் மரணித்துப்போன எம்மக்களுக்காக மாணவர்களால் கட்டப்பட்ட வணக்கத்திற்குரிய நினைவுத்தூபியை இரவோடு இரவாக புல்டோசர்களால் இடித்து அழித்தவர், எம்மனங்களை சிதைத்தைவர், இறந்த ஆத்மாக்களையே தனது பதவி சுகத்திற்காக கேவலப்படுத்தியவர்.

2. தனது சொந்தப்பணத்திலிருந்து அந்த தூபியை கட்டித்தருவேன் என்று மக்கள் மன்றத்தில் மன்றாடி மன்னிப்புக்கேட்டு் விட்டு பின்பு மக்கள் பணத்தை சூறையாடி அத்தூபியை மீண்டும் கட்டியதற்காகவும், மருத்துவப்பிரச்சனையால் தானாகவே பதவியிலிருந்து விலகிய பெண் விரிவுரையாளர் ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக மீளவும் வேலைக்கு அமர்த்தியது மட்டுமின்றி அவர் வேலைக்கு வராது எந்தப்பாடமும் படிப்பிக்காமல் வீட்டில் இருந்தபோது, துறைத்தலைவரின் அனுமதியின்றி தொடர்ச்சி்யாக சம்பளத்தையும் எல்லாப்படிகளையும் ஒழுங்கு விதிகளை மீறி ஏழைமக்களின் வரிப்பணத்திலிருந்து மில்லியன் கணக்கில் வழங்கிக் கொண்டிருப்பதற்காகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு் தொடராக விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இலங்கை வரலாற்றில் ஒரு துணைவேந்தர் தனது பதவிக்காலத்தின் போதே லஞ்ச ஊழலுக்காக விசாரணை செய்யப்படுவது இதுவே முதல் முறை.

3. தனக்கும் தன் தகுதிக்கும் போட்டியாக வரலாம் என தான் எதிர்பார்க்கும் மிகத்திறமையான மாணவர்களை வேரறுக்கும் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் அட்டூழியத்துக்கு இதுவரை பலியானவர்கள் டொம்பன், ராமரூபன், ஷாஜகான் முதலிய ஏராளமான எம் மாணவர்கள். விடைத்தாளின் சில பக்கங்களை உருவி எறிந்து அவர்களின் புள்ளிகளைக்குறைத்து கருவறுக்கும் கலை அவருக்கு மட்டும் தெரிந்தது. ராமருபனின் கழற்றப்பட்ட விடைத்தாள் வாழ்நாள் பேராசிரியர் தர்மரட்ணம் கைகளில் கிடைத்ததால் மட்டுமே இன்று ராமருபன் விரிவுரையாளராகவும் அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் கலாநிதிப் பட்டம் பெற்றவராகவும் இருக்கின்றார்.

மற்றவர்கள் நீதி இன்றி வாழ்விழந்து போனார்கள். அன்று அந்த வாழ்நாள் பேராசிரியர் தர்மரட்ணம் அவர்கள் ஸ்ரீசற்குணராஜாவை மன்னித்து இட்ட பிச்சை இன்று துணைவேந்தர் என்ற போர்வையில் முழுச் சமுகத்தினதும் உயிரை அணு அணுவாகக் குடிக்கத் தொடங்கியிருக்கிறது.

4. பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் உத்தியோகத்தர்களையும் ஆண் பெண், வயது,சமூக அந்தஸ்து, கர்ப்பிணி, பாலூட்டு்ம் தாய், குடும்ப நிலவரம் எதனையும் சிந்திக்காது, பொதுச்சபைகளில் மிக அநாகரிகமாக இழிசொற்களையும் தூஷணங்களையும் பயன்படுத்தி நையாண்டி செய்தல், கெக்கட்டமடித்தல், கத்துதல், குதர்க்கமாகப்பேசுதல். நபர்கள் இல்லாத நிலையில் அவர்களின் குடும்பப்பிரச்சனைகளையும் தனிப்பட்ட சேறு பூசல்களையும் பேரவையிலும் மூதவையிலும் பேசுதல், எள்ளி நகையாடுதல் போன்ற ஸ்ரீசற்குணராஜாவின் செயல்கள் அருவருக்கத்தக்கன.

5. பொருளாதார இறுக்க நிலையின் போது “சமூக சமயலறை” என்ற பெயரில் சில விரிவுரையாளர்களின் தனிப்பட்ட முயற்சியினால் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஏழை மாணவர்ளுக்கான இலவச மதிய உணவு வழங்கல் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மூன்று மாதங்களின் பின், இதனை தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த துணைவேந்தர், இதன் ஸ்தாபக தொண்டர்களை உடனடியாக மாற்றிவிட்டார்.

இப்போது இந்த நிதியத்துக்காக வரும் எல்லா வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு் கொடையாளர்களின் பணம் முழுவதையும் தன் பொறுப்பிலேயே எடுத்துக்கொண்டுள்ளார். ஒரு கிலோ அரிசியை 750 ரூபாவுக்கு வாங்கியதாக தானே கணக்கு எழுதி லைத்துள்ளார். இதர செலவுகள் ஒரு மாதத்துக்கு 96, 450 ரூபா கணக்கு வழக்கு கடவுளின் பெயரில் தான்.

6. தனது முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் எவராயினும் பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறை முற்றாக மீறி சர்வாதிகாரி ஸ்ரீசற்குணராசாவால் பதவி விலக்கப்படுவார்கள். பழிவாங்கப்படுவார்கள்.

பொதுச் சபைகளில் சேறு பூசப்படுவார்கள்(Character Assasination). தவறு செய்யாதவர்கள் கூட தனக்கு பணிந்து போகாத ஒரே காரணத்துக்காக, எந்த முறையான விசாரணை கூட இல்லாது இந்தத் துணைவேந்தரினால் சர்வாதிகார முறையினால் வேலையை விட்டுத் தூக்கப்பட்டார்கள். அல்லது இடைநிறுத்தப்பட்டார்கள்.

பெரும்பாலான பேரவை உறுப்பினர்ளுக்கு இருக்கும் விதி மற்றும் ஒழுங்கு முறைகள் பற்றிய குறைவான அறிவையும், தனது உரத்த சத்தத்துக்கு அவர்கள் பயப்படுவதயும் தன் வாய் ஜாலத்லதயும் வாய்ப்பாக எடுத்து அவற்றை தனது அடாவடித்தனங்களுக்கு பயன்படுத்துவார்.

இந்த அடாவடிகளையும் தான்தோன்றித்தனங்களையும் எந்த சட்டத்துக்குள்ளும் அடக்க முடியாது. ஒரு சர்வாதிகாரியின் வெறிச்செயல்களால் முழுப்பல்கலைக்கழகமும் அழிந்து கொண்டிருக்கின்றது.

7. மாணவர் விடுதியில் போதைவஸ்துடன் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு FIR போடப்பட்ட 18 பல்கலைக்கழக மாணவர்களையும் முறைகேடாக விடுவிப்பதற்காக விஞ்ஞான பீடாதிபதியையும் புரொக்டரையும் ஒரு விடுமுறை நாளில் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து பிழையான ஒரு முன்னுதாரணமாக இருந்தமை. பொலீசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை.மாணவர்களில் ஒருவரின் MP யான தமையனாருடன் நல்லுறவு பேணுவதற்கு அப்பட்டமான ஒரு சட்டமீறலைச் செய்வதற்கு தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை.

8. எல்லா விதிமுறைகளையும் முற்றாக மீறி தனது சொந்தக்காரர்களையும், ஊரவர்களையும், ஒத்தோடிகளையும் விரிவரையாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் தகுதியான திறமையான ஏழை மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளமைக்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

இதேபோல் கண்ட கண்ட தன் கால்நக்கிகளுக்கு பேராசிரியர் பதவிகளை அள்ளிக்கொடுப்பதன் மூலம் மிகச்சி்றந்த தராதரம் மிக்க உண்மையான பேராசிரியர்களின் கௌரவத்தையும் எமது கல்வியையும் குழிதோண்டிப்புதைக்கின்றமை கண் கூடு. கணிதத்துறையில் மட்டு்ம் தனக்குப்போட்டியாக எந்தப்பேராசிரியரும் வராமலிருக்குமாறு/ தலையெடுக்காதவாறு பாரத்த்துக்கொள்வார்.

9. இந்தத் துணைவேந்தருக்கு எதிராக மொத்தமாக 22 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களிலுள்ளன. சிலவற்றில் நீதிபதிகளால் அளிக்கப்பட்ட தீரப்புக்களை நடைமுறைப்படுத்துவதில்லை. சிலவற்றில் வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்போதே தனது காட்டுத்தர்ப்பாரில் விசாரணை என்ற பெயரில் தனக்கு எதிரானவர்களை பழிவாங்குவது, தனது நண்பர்களை விசாரணையாளர்களாக்கி ஏராளமான மக்கள் பணத்தை வீணாக்கியுள்ளார். மாணவர்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான அணுகுமுறைகளுக்காகவும் பழிவாங்கல்களுக்காகவும் மாணவர்களே இந்தத்துணைவேந்தருக்கெதிராக உலகில் வேறெங்கும் இல்லாதவாறு நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆலணக்குழுவிலும் பல வழக்குத்தாக்கல்கள் செய்துள்ளார்கள். அரசாங்கத்துக்கு முறையியிட்டுள்ளார்கள்.

10. “VC Media ” என்ற பெயரில் எல்லா துறைகளிலுமுள்ள மிகச்சி்றந்த தொழில்நுட்பவியலாளர்களைப் பொறுக்கி எடுத்து அவர்களை எல்லா நேரமும் தனது புழுகு மூட்டைகளையும் வெட்டிப்பேச்சுக்களையும் , காமக்கொந்தளிப்புக்களையும் படம் எடுத்து இணையத்திலும் மீடியாவிலும் மணிக்கொரு முறை வெளியிட்டு தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக்கொள்கின்றார்.

உலகில் எந்த ஒரு துணைவேந்தருக்கும் ஒரு VC Media இல்லை. இவ்வளவு பணமும் மனித உழைப்பும் இந்த நாட்டில் இந்த நேரத்தில் வீணாக்கப்படுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் போதுமான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

உலகில் எந்த நாட்டிலும் ஒரு கௌரவமான துணைவேந்தர் தன் மீதான லஞ்ச ஊழல் குற்ற விசாரணை நடைபெறும்போது பதவியில் இருப்பதில்லை.

பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா ஊழல், நிதித்துஷ்பிரயோகம், அதிகார முறைகேடு, நீதிமன்ற அவமதிப்பு, பல்கலைக்கழக ஒழுங்கு விதிமீறல் என்பவற்றுக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவாலும் நீதிமன்றங்களாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பதவியில் இருக்கும் போதே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் ஒரு முறை பதவிக்காகத் துடிப்பது, தேர்தலில் நிற்பது, போட்டியிடுவது, மீண்டும் பதவியைக் கைப்பற்றப்போராடுவது என்பது விசாரணையைக் கடுமையாகப் பாதிக்கும். விசாரணையின் போக்கைத் திசை திருப்பும் குறுக்கு வழிகளை பதவியிலிருக்கும் துணைவேந்தர் கையாளுவார். அது மட்டுமன்றி, ஊழல், நிதி முறைகேடு அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் விசாரணை முடியும் வரை அந்தப்பதவியை வகிப்பதற்கு எந்தவிதத் தகுதியும் அற்றவர்.

இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தில் ஒரு மாதத்தின் முன்னர் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சடுதியாகப்பதவி உயர்த்தப்பட்டபோது தொழிற்சங்கம் மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரசாங்கம் உடனடியாக அவரை மீண்டும் பழைய பதவிக்கு தரம் இறக்கியதை இச்சந்தர்ப்பத்தில் நாம் ஞாபகப்படுத்த வேண்டும்.

அதனால் ஊழல், நிதி முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றில் குற்றம் சாட்டப்பட்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்டுவருகின்ற பேராசிரியர் ஸ்ரீசற்குணராசாவின் இரண்டாம் தவணைக்கான துணைவேந்தர் விண்ணப்பத்தினை தகுதி நீக்கம் (Disqualify) செய்ய வேண்டுமென்று மக்கள் மன்றம் அன்புரிமையுடன் கோரிக்கை விடுக்கின்றது.

பேரவை உறுப்பினர்கள் என்ற கண்ணியத்துடனும் சமூகப்பொறுப்புணர்வுடனும் சட்டத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதற்கு , தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் பொறுப்பை மிகச்சரியாகக் கையாளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
R . ராகவேந்திரா / தலைவர்
நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான மக்கள் மன்றம்

Recommended For You

About the Author: S.R.KARAN