யாழ், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்ட குழந்தைகள்

இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பு – தெகிவளை பகுதியை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த... Read more »

இறால் வளர்ப்பு திட்டம் ,இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு – வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget Ad Widget

பாற்பண்ணையாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாத அரசாங்கம்

மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் சிங்கள விவசாயிகள் தமது மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து அரச ஆதரவுடன் மாடுகளை கொன்று குவித்தமைக்கு எதிராக பாற்பண்ணையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் 206ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 9 மாதங்களில், சட்டவிரோத விவசாயிகளால் கிட்டத்தட்ட 1,750 பசுக்கள்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை இனம்காட்ட முடியும்; ஈரோஸ் தலைவர்

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அந்த ஆயுத கையிருப்புகளை தன்னால் கண்டுபிடித்து தர முடியும் எனவும் ஈரோஸ் (ஈழப் புரட்சிகர மாணவர் ஒன்றியம்) அமைப்பின் தலைவர் ஆர். பிரபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படும் அல்பதா,... Read more »

கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மூதூர் – பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த... Read more »

தமிழர் பகுதி கல்முனை பிரதேச செயலகம் பறிக்கப்படுவது ஏன்? சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்... Read more »

அம்மான் படையணி உருவாக்கம்: ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி... Read more »

மட்டு காத்தான்குடி பொலிஸ் பகுதியில் பாரிய வீதி விபத்து

ஆரையம்பதி 4 ஆம் கட்டை பகுதியிலேயே, இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி வர்த்தக நிலையங்களை உடைத்துக்கொண்டு விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாரதி... Read more »

கல்குடா புனித ஆரோக்கிய அன்னையின் திருச்சொரூப ஊர்வலம்

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். இதனை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் விஷேட வழிப்பாடுகள் இன்று இடம்பெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருச்சிலுவைப்... Read more »

அனுரவை சாடும் தமிழீழ விடுதலை இயக்கம்

தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு –... Read more »