எதிர்க்கட்சியால் எமக்கு எந்தச் சவாலும் இல்லை – அமைச்சர் சுனில் குமார கமகே அதிரடி கருத்து!
இலங்கையில் தற்போது பலவீனமான எதிர்க்கட்சியே காணப்படுவதாகவும், எதிர்க்கட்சியால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான சவாலும் இல்லை என்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
VOICE CUT:
(அமைச்சர் சுனில் குமார கமகே)
எமது அரசாங்கத்திற்கு எந்தவிதமான சவாலும் இல்லை. ஏனெனில், வலுவான எதிர்க்கட்சி ஒன்று இருந்தால்தான் அரசாங்கத்திற்கு சவால் இருக்கும்.
ஆனால், இலங்கையில் தற்போது இருப்பது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியாகும். அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை, எதிர்கால நோக்கும் இல்லை.
மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டிவிட்டு நாட்டை மீண்டும் பின்னோக்கிக் கொண்டுசெல்ல முயற்சிக்கும் ஒரு குழுவினரே தற்போது செயற்பட்டு வருகின்றனர்.
ஆனால், சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உள்ளிட்ட அனைத்து மக்களும் ஒன்றிணைந்தே இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடித்துள்ளனர்.
எனவே, மீண்டும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்க முடியாது.
இலங்கை மக்கள் இதனை நன்கு புரிந்துகொண்டுள்ளனர். மீண்டும் இனவாதத்தை உருவாக்க எவராலும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

