இந்திய அணி வரலாறு காணாத படுதோல்வி! 

இந்திய அணி வரலாறு காணாத படுதோல்வி!

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் (Tauranga) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 333 ஓட்டங்களைக் குவித்தது.

 

இதனையடுத்து, 334 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

 

இறுதியில் 26.4 ஓவர்களில் வெறும் 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைத் தழுவியது.

 

நியூசிலாந்து அணியின் சார்பில் அபாரமாகப் பந்துவீசிய மாட் ஹென்றி (Matt Henry) 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ ஃபிஷர் (Matthew Fisher) 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

 

இதன் மூலம் இந்திய அணியை 244 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

போட்டி முடிவு:

– நியூசிலாந்து – 333 ஓட்டங்கள்

– இந்தியா – 89 ஓட்டங்கள்

– நியூசிலாந்து 244 ஓட்டங்களால் வெற்றி.

Recommended For You

About the Author: admin