தீபாவளி தினத்தன்று வலி வடக்கில் மரநடுகை செயற்றிட்டம் முன்னெடுப்பு…!
“பசுமையான வலி வடக்கு” எனும் தொனிப்பொருளில் வலி வடக்கு பிரதேசசபையுடன் விதையனைத்தும் விருட்சமே அமைப்பு.
இணைந்து முன்னெடுத்த மரநடுகை செயற்றிட்டமானது இன்று(08) மாலை 3 00 மணியளவில் காங்கேசன்துறை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதியில் முன்னெடுக்கப்பட்டது
வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற மரம் நடுகையில் 25 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
இதன் போது வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள், வலி வடக்கு பிரதேசசபை ஊழியர்கள், விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

