பாராளுமன்றக்குழு தலைவராக சிறிதரன் தெரிவு!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றது.இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன்... Read more »

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பெயர் அறிவிப்பு!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும்... Read more »
Ad Widget

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் நடராஜ்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்து உதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் அந்த கட்சியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்... Read more »

சங்கு சின்னமே மக்களுக்கு வேண்டும் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் – அடைக்கலாநாதன்

சங்குச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்பதில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்! முன்னாள் எம்பி அடைக்கலநாதன்! “ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சங்குச் சின்னத்திற்கே மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள் ஏனெனில் 5 கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கும் ஒற்றுமையை மக்கள் காண்கிறார்களென ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்... Read more »

இந்தியாவை எதிர்த்து விட்டு எதனையும் செய்ய முடியாது: செல்வம் அடைக்கலநாதன்

”அதிகாரப்பகிர்வையும், 13ஆவது திருத்தச்சட்டத்தையும் வடக்கின் அரசியல்வாதிகள் கோரவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்டகாலமாக எமது மக்களின் கோரிக்கையும், அபிலாசையுமாகும். அரசியலமைப்பின் அங்கமாக உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகிறோம்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ”இந்தியாவை புறந்தள்ளிவிட்டு... Read more »

அம்மன் ஆலயத்துக்கு தீ வைப்பு – வெள்ளித்தாலி திருட்டு

வவுனியா, தோணிக்கள் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்திற்கு விசமிகள் சிலர் தீ வைத்துள்ளனர். ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் சிரட்டைகளை கொண்டே தீ வைத்துள்ளனர். மேலும், அம்மன் சிலையில் இருந்த வெள்ளித்தாலி ஒன்றினையும் சிலையின்... Read more »

காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு

காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். ஓமந்தை – கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ரூ.திலீபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே... Read more »

பேரம் பேசும் சக்தியாக வருவோம்- முன்னாள் எம்.பி. திலீபன்

“மக்கள் ஆணையை பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம்” என, ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் பணிமனையில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்: கண்காணிப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

வவுனியா, குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய... Read more »

கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வெடுக்பகுநாரிமலை பூசகர்

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பூசகர் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.... Read more »