விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சப்த சங்கரி

அரச வளங்கள் , வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பிற்பகல் 3.30க்கு கடமையை முடித்து அலுவலக நேரத்தை கடைப்பிடிக்காமல் சேவையை பொது மக்களுக்கு வழங்காமையை செய்தி அறிக்கையிட்டமை தொடர்பில் விசாரணை நடத்த ஊடகவியலாளர் சப்த சங்கரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, எதிர்வரும்... Read more »

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக நிபுணர்களால் கோரப்பட்ட நிதிக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 40 எலும்புக்கூடுகள் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு 1.3 மில்லியன்... Read more »
Ad Widget Ad Widget

மக்களுடனான சந்திப்பை தவிர்த்து விமானத்தில் பறந்த இராணுவத் தளபதி

தமிழர்களின் தனியார் காணிகளை ஆக்கிரமித்து வன்னியில் பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த காணியில் பாதியை விடுவிக்கக் கோரி இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வன்னி கட்டளைத் தலைமையகத்திற்குச் சென்ற இராணுவத்... Read more »

இராணுவத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை?

முல்லைத்தீவு மாவட்டம், யுத்த மோதல்களினால் பாரிய அழிவை சந்தித்த பூமி. இங்குள்ள வளங்கள் பல அழிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டது. இருந்த போதிலும் தமிழ் மக்கள் உழைப்பையும் நம்பிக்கையையும் கைவிடவில்லை. 1983ஆம் ஆண்டு தொடக்கம் மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி

வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் ராஜ் சோமதேவ... Read more »

‘கேப்பாப்புலவு காணி விடுவிப்பது குறித்து அறிவிப்பு இல்லை’

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஷ்வரன் தெரிவிக்கின்றார். பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவம் தமக்கு வழங்கியுள்ள தகவல்களில் கேப்பாப்புலவு... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஒத்திவைப்பு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நிதியில்லை என மாவட்டத்தின் பிரதான அரச பிரதிநிதியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் இதுவரை நிதியை விடுவிக்கவில்லை என... Read more »

நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

நெக்டா நிறுவன ஊழியர் மீது முள்ளியவளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி, இன்று இரண்டு கடற்றொழிலாளர்கள் முள்ளியவளை முறிப்பு குளத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை,... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; எலும்புக்கூடுகள் எக்காலத்திற்குரியது?

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எந்தக் காலத்திற்குரியது என்ற விடயம் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 1994-1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தின்போது இறந்தவர்களுடையதாக இருக்கலாமென நீதிமன்றில்... Read more »

இரு நாட்களாக தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை..!

முல்லைத்தீவு கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய... Read more »