பல பொலிஸ் நிலையத்தால் தேடப்பட்டு வந்த நபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது!

பல பொலிஸ் நிலையத்தால் தேடப்பட்டு வந்த நபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது!

அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை உடைத்து அதனுள் இருக்கும் பணப்பைகள் மற்றும் தொலைபேசிகளை திருடி வந்த சந்தேக நபர் சுன்னாகம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

கண்டியில் இருப்பவரும் தற்பொழுது தெ தெல்லிப்பளை பகுதியில் வசித்து வருபவருமான 50 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மானிப்பாய் தெல்லிப்பளை யாழ்ப்பாணம் போன்ற போலீஸ் நிலையங்களில் இவர் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் பெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட வருடம் இருந்து சிறுத்தொகை பணமும் இரண்டு அடையாளம் தெரியாத தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக சொன்னாகம் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin