மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான ஆனந்தி கனகரத்னம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச்சேவையின் சிறப்புப் பிரிவு அதிகாரியான ஞானேச லலித் கன்னங்கர ஆகியோரே இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று (23) காலை அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

 

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவும் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: admin