252 மில்லியன் செலவில் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் ஆட்டிசம் சிகிச்சை மையம் – 2027 டிசம்பரில் திறக்கத் திட்டம்!
கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை வளாகத்தில் ரூ.252 மில்லியன் செலவில் புதிய ஆட்டிசம் மற்றும் நரம்பியல் பன்முகத்தன்மை சிகிச்சை மையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
“சத்பெதி” எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நவம்பர் 06ஆம் திகதி சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இம்மையத்தை 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆட்டிசம் உள்ளிட்ட நரம்பியல் வளர்ச்சிசார் பிரச்சினைகளைக் கொண்ட சிறுவர்களுக்கு பேச்சு மற்றும் மொழி சிகிச்சை, வளர்ச்சித் தேவைகளை அடையாளம் காணுதல், அன்றாட வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன. மருத்துவ உபகரணங்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் இம்மையம் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

