பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நாடு திரும்பினார்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சிமாநாட்டில் (CHOGM 2026) பங்கேற்றதைத் தொடர்ந்து, 2026 நவம்பர் 07, இலங்கை திரும்பினார்.
தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, பிரதமர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
CHOGM 2026 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பொதுநலவாய தலைவர்களுடன் இணைந்து பிரதான உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது, பொதுவான சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்காக உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் பங்குடைமைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பல பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்திய பிரதமர், பரஸ்பர நலன்சார்ந்த துறைகளில் இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.

