பார்க்கிங் தகராறு கொலையில் முடிந்தது! சிங்கப்பூர் நிறுவன உயர் அதிகாரி அண்டை வீட்டாரால் சுட்டுக்கொலை!
1. சிங்கப்பூரில் பணியாற்றி வந்த 42 வயது இந்திய நிறுவன உயர் அதிகாரி பரம்ஜித் தங்கர், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் அண்டை வீட்டாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2. ஃபரிதாபாத்தின் செக்டர் 21C பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகன நிறுத்தம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
3. உயிரிழந்த பரம்ஜித் தங்கர், சிங்கப்பூரில் செயல்படும் வியட்நாமைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
4. நவம்பர் 5-ஆம் தேதி ஃபரிதாபாத் வந்த அவர், இந்த மாத இறுதியில் நடைபெறவிருந்த தனது சகோதரியின் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காகத் தாயகம் திரும்பியிருந்தார்.
5. சாதாரண வாகன நிறுத்தப் பிரச்சினை ஒரு நிறுவன உயர் அதிகாரியின் உயிரைப் பறித்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

