கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு வளாகத் திட்டம்

கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு வளாகத் திட்டம்: ஒரு வருடத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் அறிவிப்பு!

கொலன்னாவை எரிபொருள் சேமிப்பு வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் எரிபொருள் தாங்கிகளை இன்னும் ஒரு வருடத்திற்குள் செயற்பாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

 

கொலன்னாவை முனையத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டு, திட்டப் பணிகளைப் பார்வையிட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். 3.7 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் பணிகள் தற்போது 40-45% பூர்த்தியாகியுள்ளன.

 

மொத்தம் 64,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட 6 புதிய தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு, குழாய் அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளும் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin