அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து கடவுச்சீட்டு புகைப்படம் எடுக்க அனுமதி!
அமெரிக்காவில் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஹிஜாப் மற்றும் ஏனைய மதத் தலைக்கவசங்களை அணிந்து கடவுச்சீட்டு (Passport) மற்றும் அடையாள அட்டைப் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத நம்பிக்கைக்காக ஹிஜாப் அணியும் பெண்கள், உரிய புகைப்பட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு ஹிஜாப் அணிந்தவாறே புகைப்படங்களைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, புகைப்படத்தில் முகம் தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதுடன், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான புகைப்பட விதிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
மத நம்பிக்கைகளுக்கும் தனிநபர் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் இந்த ஏற்பாடு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

