வேலைநீக்க அறிவிப்பால் உலகக் கவனம் பெற்ற Canva CEO!

வேலைநீக்க அறிவிப்பால் உலகக் கவனம் பெற்ற Canva CEO! யார் இந்த மெலனி பெர்கின்ஸ்? பின்னணி என்ன?

1. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் மெலனி பெர்கின்ஸ், Canva நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

2. சிறு வயதிலிருந்தே வடிவமைப்புத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களும் எளிதாக வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் Canva-வை உருவாக்கினார்.

3. முதலீட்டாளர்களின் பல நிராகரிப்புகளைக் கடந்து, 2013-ல் Canva-வைத் தொடங்கி உலகளாவிய வடிவமைப்புத் தளமாக வளர்த்தார்.

4. 2026 நவம்பர் 4-ல், நிறுவனத்தின் 1,271 ஊழியர்களைப் பாதிக்கும் மறுசீரமைப்பை அறிவித்தார். இது நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் சுமார் 22 சதவீதம். அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அர்த்தமில்லை.

5. பணியிலிருந்து வெளியேறுபவர்களுக்கு குறைந்தது ஆறு மாதச் சம்பளம், நிறுவன மடிக்கணினியைத் தக்கவைத்துக்கொள்ளும் உரிமை, ஓராண்டு LinkedIn Premium, மருத்துவ மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், தொழில் தொடங்க விரும்புவோருக்கு 10,000 அமெரிக்க டாலர் மானியம் ஆகியவற்றை Canva அறிவித்துள்ளது.

6. தனது கணவர் மற்றும் Canva இணை நிறுவனரான கிளிஃப் ஒப்ரெக்ட்டுடன் இணைந்து, தங்களது நிறுவனப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானதை அறக்கட்டளை மூலம் சமூக நலனுக்காக வழங்க உறுதியளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin