தீபாவளியை முன்னிட்டு நான்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
நாளை (08) கொண்டாடப்படவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த நான்கு மாகாணங்களின் ஆளுநர்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
இதற்கமைய, திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள விசேட விடுமுறைக்குப் பதிலாக எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

