கொழும்பு – மருதானை இடையிலான ரயில் சமிக்ஞை கோளாறு சீர்செய்யப்பட்டது

கொழும்பு – மருதானை இடையிலான ரயில் சமிக்ஞை கோளாறு சீர்செய்யப்பட்டது – ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

நேற்று பெய்த கடும் மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டின் அனைத்து வழித்தடங்களிலும் புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இடைக்காலப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (06) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்திருந்தது.

 

இதன்போது கொழும்பில் 129 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

 

இதன் காரணமாக கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை கட்டமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

 

இதனால் அனைத்து புகையிரத மார்க்கங்களிலும் சேவைகள் பெரும் தாமதத்துடன் இடம்பெற்றதுடன், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதால், புகையிரத சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin