யாழில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழப்பு.!
காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்.நெல்லியடியில் நடந்துள்ளது.
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ” என்ர தங்கம் பாவம்..! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் ” எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
”சாரங்கன்” என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

