வடக்கு மாகாணத்திற்கு உள்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நால்வர் பிரதம செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 13 கல்வி வலயங்களின் 4 வலயக் கல்விப் பணிப்பாளர்களிற்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தற்போதைய வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியபாலன் வலிகாமம் வலயத்திற்கும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறன்
வடமராட்சி கல்வி வலயத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தற்போதைய வலிகாமம் கல்விப் பணிப்பாளரான யமுனா
கிளிநொச்சி வடக்கு கல்விப் பணிப்பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ( தயாளன். )
இதேபோன்று தற்போதைய கிளிநொச்சீ வடக்கு வலயக்
வலயக் கல்விப் பணிப்பாளரான சிவன்அருள்ராஜா முல்லைத்தீவு வலயத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவர்களிற்கான இடமாற்றம் எதிர்வரும் 2026-10-15 முதல் அமுல் செய்யும் வகையில் இந்த இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

