ரஷ்யாவை அதிர வைக்கும் வைரஸ் போர்!!
ரஷ்யாவில் பரவும் மர்ம தொற்று குறித்த அச்சம் அதிகரிப்பு!
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் ஆய்வகத்தில் பணியாற்றிய 28 வயது ஆராய்ச்சியாளர் ஒருவர் கடுமையான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து,
ஆபத்தான தொற்று ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து மூலம் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பிலும் தனிமைப்படுத்தலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பல மருத்துவமனைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோய்த்தொற்று பிளேக் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், ரஷ்ய சுகாதார அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

