உழவு இயந்திர விபத்தில் 3½ வயது சிறுவன் உயிரிழப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை 3ஆம் யூனிற் பகுதியில் இன்று சோகத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தை 18 வயதுடைய உறவினர் ஒருவர் எடுக்க முற்பட்டபோது, அதன் பெட்டியில் நின்றிருந்த 3½ வயது ஆண் குழந்தை தவறி விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

