திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு – சஞ்சனா கல்ராணி

திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு – சஞ்சனா கல்ராணி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு என நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும், யூகங்களும் பரவி வருகின்றன.

 

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சஞ்சனா கல்ராணி, ஒரு பெண்ணை யூகங்களின் அடிப்படையில் விமர்சிப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

 

மேலும், திரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும், தனக்கு பிடித்ததை பேசவும், செய்யவும் அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதில் திரிஷாவும் விதிவிலக்கல்ல என்றும், ஒரு நடிகையாகவும், ஒரு பெண்ணாகவும் அவரை மதிக்க வேண்டும் என்றும் சஞ்சனா கல்ராணி வலியுறுத்தியுள்ளார்.

 

வாய்க்கு வந்ததை பேசாமல், தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை சஞ்சனா கல்ராணி, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin