யாழ்ப்பாணத்தில் 9 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் 9 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 9 பேரை யாழ்ப்பாண பொலிஸார் சுற்றுக்காவலின் போது கைது செய்துள்ளனர்.

 

சோதனையின்போது காரில் இருந்து கூரிய ஆயுதங்களும் ரூ.9 இலட்சம் பணமும் மீட்கப்பட்டுள்ளன.

 

கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கைது செய்யப்பட்ட 9 பேரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin