எடைக்குறைவான பாண் விற்பனை; 35 இடங்களில் மோசடி அம்பலம்
நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு குறைவாக பாண் விற்பனை செய்தல் மற்றும் சரியான எடை, விலையை காட்சிப்படுத்தத் தவறிய வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நாடளாவிய விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.
செப்டம்பர் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 107 கடைகள் மற்றும் பேக்கரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 35 இடங்களில் எடைக்குறைவான பாண் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 85 இடங்களில் பாணின் எடையும், 55 இடங்களில் விலையும் காட்சிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய பேக்கரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், போதிய ஆதாரங்கள் கிடைத்தால் நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

