இணுவில் புகையிரத விபத்தில் இரு கால்கள் ஒரு கையை இழந்த குடும்பஸ்தர்.!!

இணுவில் புகையிரத விபத்தில் இரு கால்கள் ஒரு கையை இழந்த குடும்பஸ்தர்.!!

யாழ்ப்பாணம் – இணுவில் காரைக்கால் பகுதியில் இன்று (03) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டுக்கு முன்பாக உள்ள புகையிரதப் பாதையில் ஹெட்செட் அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்தபோது, அந்தப் பாதையில் சென்ற புகையிரதம் அவர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதில் இரண்டு கால்களும் ஒரு கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

படம் ai

Recommended For You

About the Author: admin