கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக, கொம்பனித்தெரு (Slave Island) பக்கத்தில் அமைந்துள்ள பாதசாரி மேம்பாலம் ஊடாக 1, 2, 3 மற்றும் 4ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, குறித்த நடைமேடைகளுக்குச் செல்லும் பயணிகள், ரயில் நிலையத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தையோ அல்லது மருதானை பக்கத்தில் அமைந்துள்ள மேம்பாலத்தையோ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடையும் வரை பயணிகள் மாற்று மேம்பாலங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin