யாழில் பேருந்தில் இருந்து வெற்றிலைத் துப்பியதால் பயணிக்கு அசௌகரியம்

யாழில் பேருந்தில் இருந்து வெற்றிலைத் துப்பியதால் பயணிக்கு அசௌகரியம் – பொறுப்புடன் நடக்க வேண்டுமென கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியுள்ளார்.

அவ்வாறு துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம்.

🚍🏍️ சிறிய கவனக்குறைவும் மற்றொருவருக்கு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

Recommended For You

About the Author: admin