யாழில் பல விவசாய முதலீடு என பல நிதியீட்டல் நிறுவனங்கள் மக்கள் அவதானம் .
இலங்கையில் 6 நிதி நிறுவனங்கள் அவற்றின் சொத்துக்களை முடக்க தீர்மானம்.
40 வீதம் தாறம் 30 வீதம் தாறம் என பலர் விவசாய உற்பத்தி முதலீடு என வருகை தந்துள்ளனர்.
தமக்கு தேவையான பண முதலீடு கிடைக்கும் வரை யாழில் தங்கியிருந்தார்கள் ..பின் அவ்வளவு தான் !!!
ஆறு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிப்பாளர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்கும் உத்தரவுகளை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.
இதன்படி, குறித்த சொத்துக்களை விற்பனை செய்வது, மாற்றுவது அல்லது வேறு எந்த வகையிலும் கையாள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 22 ஆம் திகதி வெளி யிட்ட அறிக்கையில், 2011 ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் 44ஆம் பிரிவின் கீழ் இந்த முடக்கல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவை உறுதிப்படுத்தப்பட்டு நீடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த உத்தரவுகளுக்கு உட்பட்டுள்ள நிறுவனங்கள்: Kasagala Green Plantation
(Private) Limited
Ceylon Green Life Plantation (Private) Limited
Singhe Capital Investment Limited
Pro Shop Advertising Holdings (Private) Limited
Athens International Education Centre (Private) Limited
Eyon Lanka Investment & Film Production International Company (Private) Limited
Kasagala Green Plantation மற்றும் Ceylon Green Life Plantation
நிறுவனங்கள் தொடர்பாக நிதி வர்த்தகச் சட்டத்தின் 42ஆம் பிரிவின் கீழ் விசார ணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள் ளது.
ஏனைய நான்கு நிறுவனங்களும் குறித்த சட்டத்தின் 2ஆம் பிரிவை மீறி நிதி வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அல்லது பொதுமக்களிடமிருந்து வைப்பு களை ஏற்றுக்கொண்டதாகவும் மத்திய வங்கி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் மட்டுமே பொதுமக்கள் தமது பணத்தை வைப்பிலிட வேண்டும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
வங்கிச் சட்டம் அல்லது நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற நிறுவனங்கள் அல்லது குறித்த சட்டங்களிலிருந்து குறிப்பாக விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள் ளது.
மேலும், அனுமதியற்ற நிதி வர்த்தகம் மற்றும் பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


