உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்: செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் திட்டம்: செப்டம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆவது கட்டத்திற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

 

2023, 2024 மற்றும் 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களிலும் குறைந்தபட்சம் ‘S’ சித்தி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். அத்துடன் உயர்தரம் அல்லது சாதாரண தரத்தில் ஆங்கிலப் பாடத்தில் ‘S’ சித்தியும், பொதுச் சாதாரணப் பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகளும் பெற்றிருப்பதுடன், 25 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

 

இத்திட்டத்தினூடாக 16 அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளைப் பயில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin