எரிபொருள் விலையை கட்டுப்படுத்த G7 நடவடிக்கை — Trump வரவேற்பு
G7 நாடுகள் தங்களது அவசர எரிசக்தி கையிருப்பிலிருந்து 100 மில்லியன் பேரல் டீசல் மற்றும் கச்சா எண்ணெயை ஒருங்கிணைந்து வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிபர் Donald Trump, ஐரோப்பா அதிகளவு டீசலை கையிருப்பிலிருந்து வெளியிடுவது உலக சந்தைக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என தெரிவித்தார்.
அதேநேரம், அமெரிக்கா டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிக்காது என்றும் Trump கூறியுள்ளார்.
முன்னதாக, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தங்களது அவசர டீசல் கையிருப்பை வெளியிட வேண்டும் என Trump நிர்வாகம் அழுத்தம் கொடுத்திருந்தது.

