“ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை!”

“ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை!” – குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார் அமைச்சர் சுனில் செனெவி!

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி முற்றாக நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எம்பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், கடந்த ஆண்டுகளை விட இம்முறை யாத்திரிகர்களின் சிரமங்களைக் குறைக்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதிலும் இருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றதால் சில சவால்கள் உருவானதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவை இயன்றவரை கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், ஹஜ் யாத்திரை தொடர்பான முழுமையான அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: admin