இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87ஆக உயர்வு! புதிதாக 3 கட்சிகளுக்கு அங்கீகாரம்
தேர்தல் நடவடிக்கைகளுக்காக மேலும் மூன்று புதிய அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் அப ஜனதா பெரமுன (எம் மக்கள் முன்னணி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மூன்று கட்சிகளின் இணைவுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொத்த அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

