கிரிஷ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபாய் நிதி விவகாரம்: நாமல் ராஜபக்ச வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!
இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வழக்கின் இரண்டு சாட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட அழைப்பாணைகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

