லாஃப்ஸ் எரிவாயு நிறுவன அதிகாரியின் காரை வழிமறித்து விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய மக்கள்!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவன அதிகாரியின் காரை வழிமறித்து விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய மக்கள்!

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நிறுவன அதிகாரிகள் இன்று (16) நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டனர்.

இதன்போது, எரிவாயு சிலிண்டர்களுடன் வருகை தந்த பொதுமக்கள் நிறுவனத் தலைவரின் காரை வழிமறித்து விலைக் குறைப்பு தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நிறுவனத் தலைவர், இன்று பிற்பகல் 3 மணிக்கு எரிவாயு விலை குறைக்கப்படும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

கடந்த 13ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin