கனேடிய பொலிஸாரின் சீருடையைப் போன்று மாறுகிறதா இலங்கை பொலிஸாரின் புதிய சீருடை?
இலங்கை பொலிஸாருக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீருடை கனேடிய பொலிஸாரின் சீருடையை ஒத்திருக்கலாம் என Daily News செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சாம்பல் நிற மேல்சட்டையும் நீல நிற காற்சட்டையும் கொண்ட வடிவமைப்பு பரிசீலனையில் உள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சீருடை, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள காலனித்துவ கால காக்கி சீருடைக்கு மாற்றாகவே இந்தப் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

