ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்துவிட்டாரா? – திரைதுறையில் தொடரும் சம்பவங்கள்!
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தாங்கள் திருமண பந்தத்தில்தான் இருப்பதாகவும், வேலை உள்ளிட்ட காரணங்களால்தான் தனித்தனியாக தங்கி இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
விவாகரத்து வதந்திகள் குறித்து பேசியுள்ள அவர்.,
“நாங்கள் 100% திருமண பந்தத்தில் தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் இரண்டு வெவ்வேறு நகரங்களில் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம்.
எப்போதும் சண்டையிடுவதற்குப் பதிலாக, இப்போது நாங்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை அதனால்தான் நாங்கள் இன்னும் திருமண பந்தத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன்.
நாங்கள் ஹைதராபாத்தில் வசித்தபோது டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது தெலங்கானா போராட்டத்தினால், நான் 15 நாட்களுக்கு ஒருமுறை சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் திரும்பிச் செல்வேன்.
வேலைநிறுத்தங்கள் நடந்து பள்ளிகள் மூடப்படும்போது, எனக்கும், குழந்தைக்கும் அது மிகவும் சிரமமாக இருக்கும். நான் ஊரை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். அதனால், அவனை சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்க முடிவு செய்தேன்.
அதன்பின் தான் அவர் அங்கும், நான் சென்னையிலும் என வசிக்க தொடங்கினோம்.
ஒரு உறவில் திருமணம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு செயல்முறை என்று நான் உணர்கிறேன். தேவைப்படும்போதுதான் திருமணம் நடக்க வேண்டும். உண்மையில், வம்சி, ‘ஏன் திருமணம்? நாம் சேர்ந்து வாழ்வோம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
நான்தான் அப்போது கேட்கவில்லை. திருமணத்தில் குடும்பங்கள், உங்களைச் சுற்றிப் பலரும் இருக்கிறார்கள், மேலும் அந்த நபருடனான உங்கள் உறவை விட, திருமணம் எனும் பந்தத்திற்குதான் நீங்கள் அதிகப் பொறுப்புடையவராக இருக்கிறீர்கள் என்று நான் உணர்கிறேன்.

