திவுலப்பிட்டியில் பாரிய தீ விபத்து!

திவுலப்பிட்டியில் பாரிய தீ விபத்து! ஏற்றுமதிக்காகச் சேமிக்கப்பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் தீக்கிரை

திவுலப்பிட்டி – வாவகெதர பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், ஏற்றுமதிக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய இலத்திரனியல் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

முன்னதாக தேங்காய் மட்டைத் தொழிற்சாலை எனக் குறிப்பிடப்பட்ட இந்தக் கட்டடம், இலத்திரனியல் கழிவுகள் மற்றும் உபகரணங்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியசாலை எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்புப் பிரிவுகள், இலங்கை விமானப்படை, இராணுவம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திவுலப்பிட்டி பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்தச் சம்பவத்தில் பாரிய சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் திவுலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin