அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஊழல்வாதிகளாகவும் திருடர்களாகவும் சமூகத்தில் சித்தரிக்கும் மோசமான முன்னெடுப்பை தற்போதைய அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் குறிப்பிட்ட சில நபர்களை மாத்திரம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நோக்கில் இலக்கு வைத்து, சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்தி வருவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியாகத் தமது விமர்சனங்களை முன்வைக்கும் அரசியல் எதிர்ப்பாளர்களை, ஆளும் தரப்பினர் தங்களின் தனிப்பட்ட எதிரிகளாகவே கருதிச் செயற்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகள் ஜனநாயக மாண்புகளுக்கு முற்றிலும் முரணானது என அவர் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்

