அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் 27 முதல் வழங்கப்படும்!

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நவம்பர் 27 முதல் வழங்கப்படும்!

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

 

புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இப்பணிகளை நிறைவு செய்வதற்கு பிரதேச செயலாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நிமல் கொடவெலகெதர தெரிவித்துள்ளார்.

 

மேலும், மத்திய கிழக்கு நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவும், வறிய மற்றும் மிகவும் வறிய குடும்பங்களுக்கான வழமையான அஸ்வெசும கொடுப்பனவுகளுடன் இணைத்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin