தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் (Nasser Medical Complex) மீது
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 6 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன்,
20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து உள்ளிட்ட 18 அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை நாசர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைப் பிரிவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரும் பதின்ம வயது நோயாளி ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நோயாளர் விடுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
மருத்துவ நிலையங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

