ஆங்கிலப் பாட இலவச போட்டிப் பரீட்சை!

பூமணி அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் நெறிப்படுத்தலில்,அவரது சொந்த நிதி மூலம் யாழ்,மாநகரசபை எதிரில் உள்ள MSD ஆங்கில பயிற்சி மையத்தில் அதன் உரிமையாளரும் ஆங்கில பாட ஆசிரியருமான மனோ மாஸ்ரர் தலைமையில் நடைபெறும் ஆங்கில பாட வகுப்புகளில் சொல்லறிவு,மொழியறிவுத் திறனை விருத்தி செய்து வளர்ப்பதற்கான ஆங்கிலப் பாட வகுப்புகளில் பங்கு கொள்ளும் மாணவர்களிக்கிடையில்,இலவச போட்டிப் பரீட்சைகளை நாடாத்த அதற்கான வினாத் தாள்களையும் பரீட்சையில் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்க பூமணி அம்மா அறக்கட்டளை நிதி அனுசரணை வழங்கவுள்ள,ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்.

கடந்த 04/11/2022 அன்று MSD ஆங்கில வகுப்பு கல்வி மையத்தில் மனோ மாஸ்ரர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: admin